தடுப்பு மருந்து (நோய் தடுப்புப் பால்)
  
Translated

தடுப்பு மருந்து — நோயிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டவும் பயன்படும் ஓர் உயிரியல் பொருள்தான் தடுப்பு மருந்து. தடுப்பு மருந்து பெரும்பாலும் ஊசி மூலம் உடலில் செலுத்தப்படுவதால் பொதுமக்கள் அதை தடுப்பூசி என்று அழைக்கின்றனர். தடுப்பூசி உடலின் நோய் தடுப்பாற்றல் அமைப்பை ஊக்கமூட்டி அயல் கிருமிகளை நினைவில் கொள்ளவும், மீண்டும் சந்திக்கும் போது அடையாளம் காணவும் தூண்டுகிறது, எனவே, அடுத்த முறை அந்த அயல் கிருமிகளை எதிர்கொள்ளும்போது, ​​நீங்கள் நோய்வாய்ப்பட மாட்டீர்கள்.

 

"குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்குச் சளிக்காய்ச்சல், குக்கல் (பெர்ட்டூசிஸ்) போன்ற நோய்களுக்குத் தடுப்பூசிகள் கட்டாயம் தேவை.”

 

“நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் போராட்டத்தில் தடுப்புப் பால் ஒரு வலுவான பங்கைக் கொண்டுள்ளது. தடுப்புப் பால்கள் பல நுண்கிருமிப்பிணிகள் பரவுவதைத் தடுக்கின்றன. மேலும், கொல்லிகளின் அளவுக்கு அதிகமாகவும் தவறாகவும் பயன்படுத்துவதைக் குறைக்கலாம்.”

 

Learning point

தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பும் அதன் செயல்திறனும்

 

பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தடுப்பு மருந்துகளின் பயன்பாடு தொடங்கியது. சீன மருத்துவர்கள் நோய் தடுப்புத்தன்மையை உருவாக்குவதற்குத் தோல் கீறலில் பெரியம்மை மாதிரி கூறுவைப் பூசினர். இந்த முறை ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்வதற்கு முன்பு ஆப்பிரிக்காவிலும் துருக்கியிலும் பரவியது. 1796ஆம் ஆண்டில், எட்வர்ட் ஜென்னரின் பசு அம்மை (மாட்டம்மை) கொப்புளங்கள் உட்பொருளை மனிதர்களுக்குள் செலுத்தினார். இது சின்னம்மையை எதிர்க்கும் சக்தியை உருவாக்கியது.  இந்நூதன கண்டுபிடிப்புத் தடுப்பு மருந்தின் மேல் நம்பிக்கை ஏற்படுத்தி மிகவும் பரவலாகியது. [1]

 

முதலில், ஜென்னர், பால்காரிகள் மட்டுமே பெரியம்மை நோயால் பாதிக்கப்படாததைக் கவனித்தார். அவர் பால்காரிகள் கைகளிலிருந்தக் கொப்புளங்களை ஓர் உலோகதத்தில் துடைத்து அவரது தோட்டக்காரரின் மகன் ஜேம்ஸ் பிப்ஸுவின் கையைக் கீறி செலுத்தினார் (தடுப்பூசிக்கு ஒத்ததாகும்). பெரியம்மை நோயாளிகளுடன் ஜேம்ஸ் அணுகிப் பழகும்போது பெரியம்மை நோயால் பாதிக்கப்படாததை ஜென்னர் கண்டறிந்தார். அவர் தனது கண்டுபிடிப்புக்கு ‘வெக்சீன்’ என்று பெயரிட்டார், லத்தீன் மொழியிலிருந்து; ‘வாக்கா (vacca) - பசு’ என்றும், மற்றும் வாக்சினா (vaccina) - பசுஅம்மை என்று பொருள்படும்.

 

எதிர்நுண்கிருமிகள் வழங்குவதற்கும் தடுப்பூசி போடுவதற்கும் வேறுபாடு உண்டு. ஒரு நோயால் பாதிக்கப்பட்டப் பிறகு உடலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க ஒரு எதிர்நுண்கிருமி கொடுக்கப்படுகிறது.  ஒரு நுண்கிருமிப்பிணியால் பாதிக்கப்படும் முன்பு தடுப்பு மருந்துகள் உடலில் உள்ளே செலுத்தப்படுகிறது. தடுப்பு மருந்து நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதால் கிருமிகளை நினைவில் கொள்கிறது, மேலும், எதிர்காலத்தில் உடல் அவற்றை எதிர்கொண்டால் நினைவுகூர்ந்து அக்கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறது.

 

தடுப்பு மருந்துகளால் நுண்ணுயிர்ப்பிணிகளையும் தீநுண்மப்பிணிகளையும் குறைக்க முடியும். இதனால், எதிர்நுண்கிருமிகளின் பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற பயன்பாட்டைக் குறைக்கலாம். ஆகையால், நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றலைக் குறைக்க தடுப்பூசிகளுக்கும் பங்கு உண்டு.[2]

 

ஆதார நூற்பட்டியல்

[1]        ரீடெல், எஸ். (2005). எட்வர்ட் ஜென்னர், பெரியம்மை மற்றும் தடுப்பு மருந்து   வரலாறு. பெய்லர் பல்கலைக்கழக மருத்துவ மைய நடவடிக்கைகள்

Riedel, S. (2005). Edward Jenner and the History of Smallpox and Vaccination. Baylor University Medical Center Proceedings,18(1), 21-25. doi:10.1080/08998280.2005.11928028

[2]        புளூம், டி. இ., பிளாக், எஸ்., சாலிஸ்பரி, டி., & ரப்பூலி, ஆர். (2018). நுண்கிருமிகள் எதிர்ப்பாற்றல் மற்றும் தடுப்பூசிகளின் பங்கு.

Bloom, D. E., Black, S., Salisbury, D., & Rappuoli, R. (2018). Antimicrobial resistance and the role of vaccines. Proceedings of the National Academy of Sciences,115(51), 12868-12871. doi:10.1073/pnas.1717157115

Related words.
Word of the month
New word